Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித சூசையப்பர் 1123-  


நசரேத்து கடைந்தெடுத் தளிர்த் தண்டே - போற்றி போற்றி
அன்பினால் அனைவரையும் கொள்ளை கொண்ட ரோஜாவே - போற்றி போற்றி
பண்பினால் பாசம் வளர்த்த வெள்ளை மனமே - போற்றி போற்றி
உதவிக் கரம் படைத்த உயர்ந்தவா - போற்றி போற்றி
மலர்ந்த முகத்தாலென்னை மகிழ்வித்த மாதவனே - போற்றி போற்றி
கலைமையற்ற அச்சுக்களிலே பிறந்த கலைமகனே - போற்றி போற்றி

உழைப்பே உயர்வு எனப் பாடம் தந்தவா - போற்றி போற்றி
இறைசித்தத்தில் உதிர்த்த கதிரவனே - போற்றி போற்றி
பாலன் இயேசுவின் தந்தையானவரே - போற்றி போற்றி
மாசற்ற மரியாளின் துணையாளரே - போற்றி போற்றி
முன்னோரின் வாழ்வான வளனாரே - போற்றி போற்றி
இயேசுமரி பாதுகாத்த பெட்டகமே - போற்றி போற்றி
துயரினில் தெளிந்த நீரோடையே - போற்றி போற்றி
தூக்கத்தில் தூதரைக் கண்ட நல் தந்தையே - போற்றி போற்றி

எளிமையை ஆடையென அணிந்தவரே - போற்றி போற்றி
ஏழ்மையை அணி செய்த ஆனந்தனே - போற்றி போற்றி
ஓயாது ஊழையிட்ட உணர்வுற்ற தேவனே - போற்றி போற்றி
கடினமான பாதையை கனிவாய் ஏற்றவரே - போற்றி போற்றி
மழை பயணத்தில் பயணித்த மாதிரிகையே - போற்றி போற்றி
அன்னைமரி உடன் நின்ற உன்னதரே - போற்றி போற்றி
இயேசுவை வளர்த்தளித்த காவியமே - போற்றி போற்றி
அன்பினால் மரியாவை அரவணைத்த அன்பரே - போற்றி போற்றி
Plerinage des tamouls Lourdes
கல்வியின் காவலரே ஞானத்தந்தையே -போற்றி போற்றி
உண்மைக்குச் சான்றான நீதிமானே -போற்றி போற்றி
துறவியின் தூய்மையான மாதிரிகையே -போற்றி போற்றி
விவேகத்தில் சிறந்த நற்கனியே - போற்றி போற்றி
உறவினில் சிறந்த கோமகனே - போற்றி போற்றி
ஊரார் போற்றும் நற்பண்பே - போற்றி போற்றி
பணிவினால் தந்தையை பணியச் செய்த வல்லவரே
உலகோரின் உள்ளத்தை கொள்ளை கொண்ட வல்லவரே -போற்றி போற்றி

தரணியினை தாழ்ச்சியின் தடாகமே - போற்றி போற்றி
இல்வாழ்வில் மலர்ந்த நல் மாதிரிகையே - போற்றி போற்றி
நல்லெண்ணத்தால் தீமையை வென்றவரே - போற்றி போற்றி
திருக்குடும்பமாய் சிறக்க வழி நின்ற தந்தையே -- போற்றி போற்றி
உழவர்க்கு உதவிட்டஉழைப்பாளரே - போற்றி போற்றி
துயரினில் ஆறுதல் ஆனவரே - போற்றி போற்றி
உள்ளம் உடைந்தோருக்கு ஆறுதல் ஆனவரே - போற்றி போற்றி
நோயினால் வீழ்ந்தோரை ஆதரித்த மருத்துவரே - போற்றி போற்றி

விடாமுயற்சியின் விடிவெள்ளியே - போற்றி போற்றி
அமைதியில் சாந்தியினை அருள்பவரே - போற்றி போற்றி
ஈகையில் உயர்ந்த வள்ளல் சரமே - போற்றி போற்றி
தீயோரைத் திருந்தச் செய்யும் பெருமறை பெற்றவரே - போற்றி போற்றி
ஏங்குவோரின் ஏக்கம் துடைப்பவரே - போற்றி போற்றி
ஏழைகளின் உறைவிடம் ஆனவரே - போற்றி போற்றி
ஐயத்தின் பிளவுக்குத் தெளிந்த நல் நீரோடையே - போற்றி போற்றி
ஆயராய் இளையோரின் உள்ளம் இன்று காப்பவரே - போற்றி போற்றி

மழலையின் குறும்பினில் மகிழ்பவரே - போற்றி போற்றி
குழந்தை மனம் படைத்த பாசமலரே - போற்றி போற்றி
இயேசுமரி காத்த காந்தள் மலரே - போற்றி போற்றி
இரக்கத்தால் அனைவரையும் மகிழ்வித்த இனியவரே - போற்றி போற்றி
திருத்தந்தை பயசால் உயர்த்தப்பட்டவரே - போற்றி போற்றி
அனைத்துலக திருஅவையின் காவலரே - போற்றி போற்றி
முவைம்பதில் உதித்த யூபிலி நிலவே - போற்றி போற்றி
எமக்காக பரிந்துரைக்கும் வல்லவரே
மங்களம் மங்களம் மங்களமே
சூசை தந்தைக்கு மங்களமே
மங்களம் மங்களம் மங்களமே
அன்னை மரிக்கு மங்களமே
மங்களம் மங்களம் மங்களமே
இயேசுவுக்கு மங்களமே
மங்களம் மங்களம் மங்களமே
முவோரு இறைவா மங்களமே (3)









 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!