tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் மரியன்னையே எங்கள் மாமரியே

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே
விடிவெள்ளியே எங்கள் காவலியே
பணிவோம் புகழ்வோம் வாழியவே (2)

அண்ணல் இயேசுவின் மீட்புப்பணியிலே
அடித்தளமாய் அமைந்த கன்னியே
அருள் வாழ்விலே நிறைவு காணவே
அடிமை என்ற அர்ப்பணப் பூவே (2)
அன்புப் பலியுமே எங்கள் வாழ்விலே
அவனி மாந்தர் என்றும் காணவே
அன்னை உங்களின் ஆசீர் வேண்டியே
அர்ப்பணித்தோம் இன்று எம்மையே (2)


பெண்ணின் மேன்மைக்கே பெருமை சேர்த்திட்ட
பேறு பெற்ற பெண்மணி நீயே
மண்ணில் நாங்களும் கலங்கித் தவித்திடும்
பெண்கள் துயரை நீக்க வந்தோமே
கல்வி மருத்துவம் சமூக மறைப்பணி
செய்தோம் இறைவன் அரசு மலரவே
செல்வோம் உலகிலே இயேசு பாதையில்
அன்னை உந்தன் அரவணைப்பில்


ஆயிரகத்திலே எம்மைக் காத்திடும்
ஆரோக்கிய அன்னை மாமரி
இம்மண்ணிலே இறைசமூகமாய்
இருபத்தைந்து ஆண்டைக் கண்டோமே
அன்பு உறவிலே சமூக மறைப்பணி
செய்தோம் இறைவன் அரசு மலரவே
வெள்ளி விழாவினில் நன்றி கூறியே
அன்னை உந்தன் அடிபணிந்தோமே






 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா