| மாதாபாடல்கள் | இனிய கானம் கேட்குதே |
|
இனிய கானம் கேட்குதே கடலின் கரையிலே கருணை உள்ளம் பாடுதே மனமும் உருகுதே அலையெல்லாம அருள்வடிவிலே இசையெல்லாம் எழும் திசையிலே அன்னை உந்தன் வானில் நிலவென காலைக் கதிரென நீ எழுந்தாய் பாடும் கவியென ஓடும் நதியென நீ பிறந்தாய் நீலக் கடலெங்கும் நீந்தும் மலை தன்னில் நீ தவழ்ந்தாய் சோலை மலரென பூவில் மணமென நீ கலந்தாய் வானெங்கும் விண்மீனென மேவும் ஜோதியே ஆனந்தம் பேரானந்தம் உனைக் காணும் போதிலே உன் பார்வையால் என் பாவங்கள் போக்கவேண்டுமே ஆலம் விழுதென அன்னை அருளினை நான் அறிந்தேன் முன்னம் வினையெல்லாம் எங்கே சென்றதென நான் அறியேன் காலம் பொழுதென்ன காக்கும் கரம்தன்னில் நான் தவழ்ந்தேன் தேடும் விழிதன்னில் காணும் கருணையை நான் உணர்ந்தேன் பூவெல்லாம் உன் புகழையே எந்நாளும் பாடுவேன் நாவெல்லாம் உன் நாமமே நாளும் போற்றுவேன் நாளெல்லாம் நின் பூமுகம் கருணை சிந்துமே |