| மாதாபாடல்கள் | அம்மா அம்மா உனைப் பார்த்தேன் |
|
அம்மா அம்மா உனைப் பார்த்தேன் தாயே உன்னிடம் சரணடைந்தேன் கண்ணீர் கவலை மறந்துவிட்டேன் நீயே துணையென வந்துவிட்டேன் எனக்கே எல்லாம் நீ தானே என்றும் தஞ்சம் நீ தானே அருள் நிறைமரியே ஆண்டவர் தாயே நான் உன் மகனல்லவா ஆகட்டும் என்ற அகிலத்தின் தாயே நான் உன் மகளல்லவா உன்னால் தானே உயிர் வாழ்கிறேன் உன்முகம் பார்த்தே உறவாகினேன் நீயின்றி எனக்கு வாழ்வேது உன் அருளின்றி எனக்கு வழியேது பலமுறை முயன்றேன் செயல்களில் தோற்றேன் இழிவைத் தினம் அடைந்தேன் தனிமையில் தவித்தேன் பிழைபல புரிந்தேன் வருத்தம் பல அடைந்தேன் உன்கோவில் வந்தேன் நலமாகினேன் உன் பாதம் சேர்ந்தேன் நலமாகினேன் நீயின்றி எனக்கு வாழ்வேது உன் அருளின்றி எனக்கு வழியேது கண்ணீர் துடைத்து கவலைகள் ஒழித்து புதுமை புரிந்தாயே கேட்டதை எல்லாம் அள்ளியே கொடுத்து வளமை தந்தாயே உன்னிடம் கேட்டேன் நிறைவாகினேன் உன்னருள் மழையில் வரமாகினேன் நீயின்றி எனக்கு வாழ்வேது உன் அருளின்றி எனக்கு வழியேது |