Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் அழகின் மாமணியே


அழகின் மாமணியே இயேசுவின் தாய் மரியே - 2
ஆகட்டும் என்றீர் அவர் கரம் பணிந்தே
அண்டி வந்தோருக்கு அருள் வரம் தந்தே
அனுதினம் காத்திடும் சகாயத் தாயே
என்றுமே நீ வாழ்க எங்களின் தாய் மரியே
அழகின் மாமணியே இயேசுவின் தாய் மரியே

பன்னிரு விண்மீன் தலையதில் சூடி
விண்ணகம் அமர்ந்தாயே
வானவர் அணிகள் அரியணை சூழ்ந்து
புகழ்ந்திடும் பேரருளே - 2
படைத்தவன் பார்வையில் பரிசுத்தம் கண்டே
பரமனின் தாயானாய் - 2
பாவிகள் எம்மை பரிவுடன் மீட்க (பரமனை எமக்களித்தாய் - 2)
அழகின் மாமணியே இயேசுவின் தாய் மரியே...

தீமையின் துன்ப துயரினில் வாடி
உன் பதம் வந்தோமே
தீங்கின்றி நாளும் நலமுடன் வாழ
சேயெம்மைக் காப்பாயே - 2
இவரே உம் தாயென யேசுவை தந்தார்
மனுக்குல தாயானாய் - 2
உம் பிள்ளைகள் யாவரும் குறையின்றி வாழ்ந்திட
மகனிடம் பரிந்துரைப்பாய் உம் மகனிடம் பரிந்துரைப்பாய்
அழகின் மாமணியே இயேசுவின் தாய் மரியே..






 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா