திருமணப் பாடல்கள் | 1505-வாழ்க வாழ்க வாழ்க |
வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு - மணமக்களே வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே (2) இருமனங்கள் இணைவதுதான் அருட்சாதனம் -இது இறையருளால் நடந்தால்தான் நந்தவனம் நந்தவனம் இருமனங்கள் இணைவதுதான் அருட்சாதனம் பெற்றோரின் ஆசியுடன் உற்றார்கள் உடனிருக்க குருகுலம் சாட்சி பெறும் அருட்சாதனம் வாழிய மணமக்கள் வாழ்க வாழ்கவே (2) ஆதாமுக்கு ஏவாளை ஆண்டவரே துணை சேர்த்தீர் ஆபிரகாம் சாராவையும் இல்லறத்தில் இணைத்து வைத்தீர் இன்பத்திலும் துன்பத்திலும் - வளமையிலும் வறுமையிலும் ஓன்றாகும் உடன்படிக்கை அருட்சாதனம் வாழிய மணமக்கள் வாழ்க வாழ்கவே (2) இறைவனில் இணைந்திட்ட இதயங்கள் மலரட்டும் உதயங்கள் பிறந்திட வாழ்த்துவோம் என்றென்றும் கானாவூர் திருமணத்தில் திராட்சைரசம் பெருகச்செய்தீர் காலமெல்லாம் இணைந்துவாழ மாதாவுடன் அருள் பொழிந்தீர் கிறீஸ்துவும் திருச்சபையும் - இரண்டறக் கலந்ததுபோல் ஒன்றாக வாழவைக்கும் அருட்சாதனம் வாழிய மணமக்கள் வாழ்க வாழ்கவே (2) இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தான் தேவனவன் இல்லறத்தில் சூசையையும் மேரியையும் இணைத்து வைத்தான் வானவர் துதிபாட வையத்தோர் வாழ்த்துரைக்க பதினாறு பேறு பெறும் அருட்சாதனம் வாழிய மணமக்கள் வாழ்க வாழ்கவே (2) |