Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் சிலுவையே சிலுவையே தூய வெள்ளி


சிலுவையே சிலுவையே
சிலுவையே சிலுவையே
சிரம் தாழ்ந்து உனைச்சுமந்து
மனம் தெளிந்து விழுந்தெழுந்து
கல்வாரிப் பயணம் செய்யும் பரமனின்
துயரம் பார்த்தாயா பாரம் குறைப்பாயா
சிலுவையே சிலுவையே 2


1) இயேசு தீர்ப்பிடப்படுகின்றார்.
மத்: 27:11
இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று கூறினார்.

பாவமே அறியாத தேவமைந்தனை
பழி சுமத்தி உயிர் பறிக்க தீர்ப்பளிக்க
தீர்ப்பளித்தனரே தீர்ப்பளித்தனரே (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
அநியாய தீர்ப்பைப் பெற்று
முள்முடி தன் தலை தரித்து
ஏற்றீரே தீர்ப்பை ஏற்றீரே
ஏற்றீரே விரும்பி ஏற்றீரே


2) இயேசுவின் மீது சிலுவை சுமத்தப்படுகிறது.
மத்: 27:31

அவரை ஏளனம் செய்தபின் அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.
அவமானச் சின்னமான பாழ் சிலுவைதனை
அகர நகரமானவரின் தோள் சுமத்தினரே
தோள் சுமத்தினரே (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
வாய்பேசா செம்மறியாய்
கல்வாரி மலை நோக்கி
விரைந்தீரே சிலுவை சுமந்தீரே
விரைந்தீரே சிலுவை சுமந்தீரே

3) இயேசு முதன் முறை கீழே விழுகின்றார்.
லூக்: 23:23

அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.
பளுவான சிலுவையும் பாவச் சுமைகளும்
பரமனை புவிநோக்கி விழுந்தாட்டியதோ விழுந்தாட்டியதோ (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
தடுமாறி விழுந்தாலும் துணிவோடு எழுந்து
சென்றீரே விழுந்தும் எழுந்தீரே
சென்றீரே விழுந்தும் எழுந்தீரே


4) இயேசு தன் தாயைச் சந்திக்கின்றார்.
 
லூக் 2:48
அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார்.

பாலூட்டி சீராட்டி வளர்த்த அன்னையை
பார்த்ததும் பாதி சுமை இறங்கிவிட்டதோ இறங்கிவிட்டதோ (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
தாயன்பு உறவுக்கு ஈடு இணை எதுவுமில்லை
உணர்ந்தீரே வலிமை பெற்றீரே
உணர்ந்தீரே வலிமை பெற்றீரே

5) இயேசுவின் சிலுவையை சுமக்க சீமோன் உதவுகிறார்.
 
மத்:27:32
அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.

பாரமும் துரோகமும் தோளினை அழுத்த
சுமையை சற்று பகிர்ந்திட சீமோன் வந்தாரே சீமோன் வந்தாரே (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
ஆபத்தில் உதவும் உறவே உயர்வு
அறிந்தீரே அறியச் செய்தீரே (2)


6) வெரோணிக்கா இயேசுவின் முகத்தை துடைக்கின்றார்.

எசா: 53:3
அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை.

வாள் வீரர் சூழ்ந்து நிற்க பரமனின் முகத்தை
வீரத்தோடு வெரோணிக்கா துடைக்க வந்தாரே துடைக்க வந்தாரே (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
பெண்மைக்குள் துணிவுண்டு மாண்பற்றால் வாழ்வுண்டு
கொடுத்தீரே வாழ்வைக் கொடுத்தீரே
கொடுத்தீரே வாழ்வைக் கொடுத்தீரே

7) இரண்டாம் முறையாக இயேசு கீழே விழுகின்றார்.
மத்:16:26
பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.

இரண்டாம் முறை சிலுவையில் பாரச் சுமையினால் விழுந்தாரே நிலத்தை முத்தமிட்டாரே முத்தமிட்டாரே (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
விழும்போது தாங்கும் விழுதுகளாய்
வாழவும் செய்தீரே வாழச் சொன்னீரே
வாழவும் செய்தீரே வாழச் சொன்னீரே

8) ஜெருசலேம் பெண்களுக்கு இயேசு ஆறுதல் சொல்கின்றார்.

லூக்:23:28
இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்.

ஆறுதல் தருபவர்க்கே ஆறுதல்மொழியால் ஜெருசலேம் பெண்களும் துயருற்றனரே துயருற்றனரே (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
துன்புறுவோர் துயர் துடைத்தல் மனிதத்தின் விடியல்
என்றீரே தொடர்ந்து சென்றீரே
என்றீரே தொடர்ந்து சென்றீரே

9) இயேசு இரண்டாம் முறையாக கீழே விழுகின்றார்.
யோவா: 12:24
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

மூன்றாம் முறையாக தரையில் வீழ்ந்ததும் முடிவுற்றது வீழ்ச்சியின் வெற்றிப் பயணம் வெற்றிப் பயணம் (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
மடிந்தால்தான் பலனளிக்கும் கோதுமைமணி படிப்பினையை
வாழ்ந்தீரே வாழச் சொன்னீரே
வாழ்ந்தீரே வாழச் சொன்னீரே

10)  இயேசுவின் ஆடையைக் களைகின்றார்.
மத்: 27:28
அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர்.

உண்ண அப்பம் பலுகிடச் செய்தவரின் உடையை அவிழ்த்துப் பாதி மனிதன் ஆக்கிவிட்டனரே ஆக்கிவிட்டனரே (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
உடையை உரிப்பது உணர்வை சிதைப்பதே
நொந்தீரே பொறுத்துக் கொண்டீரே
நொந்தீரே பொறுத்துக் கொண்டீரே

11) இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்.
லூக் 23:33
மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.

பாடுபட்டு கல்வாரி மலையைச் சேர்ந்ததும்
ஆணிகள் உம் கைகால்களை முத்தமிட்டனவே பதம் பார்த்தனவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
ஏனிந்த நிலமை எமக்காகச் சிலுவை
தொங்கவே எம்பழி தாங்கவே
தொங்கவே எம்பழி தாங்கவே

12)  இயேசு உயிர் துறக்கிறார்.
யோவா: 19:30
அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.

மானிட உரு தரித்ததேவன் சிலுவை மரத்தினில்
தனை இழந்து உயிர் துறந்து மாண்பு பெற்றாரே மீட்பளித்தாரே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
இல்லார்க்கு எல்லாமாய் இருந்தவர் இன்றில்லையென
ஏங்குதே உள்ளம் நோகுதே
ஏங்குதே உள்ளம் நோகுதே

13) அன்னையின் மடியில் இயேசுவின் உடல்.

லூக்:23:48
இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டுஇ மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.

 மடிந்துபோன உடலுக்கேது வெகுமதி சிறப்பு
தாய்மடிதான் அறியும் தன் பிள்ளையின் மதிப்பு பிள்ளையின் மதிப்பு (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
எலகெங்கும் சென்றாலும் உறவெல்லாம் இருந்தாலும்
தாய்மடிதான் சிறந்த புகலிடம் தான்
தாய்மடிதான் சிறந்த புகலிடம் தான்

14) இயேசுவின் உடலை அடக்கம் செய்கிறார்கள்.
யோவா:19:42
அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.

தாழ்வினும் சாவினும் உயர்ந்து நிற்கவே
விதையாக கல்லறையில் விதைக்கப்பட்டாரே விதைக்கப்பட்டாரே (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
என்றும் மெதாடரும் இக்கல்வாரிப் பயணம்
மாற்றட்டும் வாழ்வை மாற்றட்டும்
மாற்றட்டும் வாழ்வை மாற்றட்டும்





 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?