Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரப்பாடல்கள் வியாகுல தாயே வினைகளை தூய வெள்ளி

வியாகுல தாயே வினைகளைத் தீர்ப்பாய் நீயே
கடவுளின் மகனை கருவினில் ஏற்றாய் நீயே
உள்ளம் உடைந்து வாழும் மக்கள்
உந்தன் அருளை வேண்டி வந்தோம்
கண்ணீர் மல்க கரைந்து வந்தோர்
கவலை தீர விரைந்து வந்தோம்

தேடிச்சென்று உதவிடும் ஆறுதலின் அன்னையே
நாடிவந்த மக்களுக்கு நலம்தருவாய் அன்னையே
ஏழைகளின் நற்செய்தி நீயாவாய் அன்னையே
துன்பங்களை வென்றெடுத்த வியாகுல அன்னையே

மனிதம் போற்றும் மாமரியே வியாகுல அன்னையே
மானுடத்தின் விடிவெள்ளி வியாகுல அன்னையே
உறவுகளின் உறைவிடமே வியாகுல அன்னையே
இறையாட்சியின் சாட்சியே வியாகுல அன்னையே



 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?