Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரப்பாடல்கள் சிலுவை இறை ஞானமே தூய வெள்ளி


சிலுவை இறை ஞானமே
ஆழ் மன தியான மையமே
தொடுகிறேன் நான் உணர்கிறேன்
உன் பாடு மரணம் உயிர்ப்பினையே

கல்வாரிக் கதறல்கள் முழங்குதே
உன் கனிவன்பின் மிகுதியை
நீரேற்ற பாடுகள் சாற்றுதே
என் பாவக் கொடுமையை

ஓருதுளி கண்ணீர் போதுமே
உமதன்பை சுவைத்திட
ஒரு துளி குருதி போதுமே
மனக் காயம் ஆறிட

என்னோடு பேசும் இயேசுவே
சிலுவையின் அருகில் வந்துள்ளேன்
ஆழ்மனக் கதறல் மறையுமே
உன் அன்பு பார்வையால்


 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?