புனிதவாரப்பாடல்கள் | மன்னிப்பாயா....... மன்னிப்பாயா...... | தூய வெள்ளி |
மன்னிப்பாயா....... மன்னிப்பாயா...... மன்னிப்பாயா........ இறைவா என்னை மன்னிப்பாயா.. மன்னிப்பாயா.. மன்னிப்பாயா (2) ஊதாரி மைந்தனாய் ஊர் ஊராய் அலைந்தேன்.. தந்தை வீடு திரும்பிய தனையனை ஏற்பாய்.. 1. குடிவெறியால் என் குடும்பத்தை குலைத்தேன் கொடுங்கோபத்தால் என் நண்பரை இழந்தேன் தரங்கெட்ட மகளிரை தேடி அலைந்தேன் (2) தகாத வார்த்தையால் தவறிழைத்தேன் மன்னிப்பாயா.. மன்னிப்பாயா.. 2. புறங்கூறிப் பிறர் பெயர் கெடுத்துவிட செய்தேன் பொறாமை கொண்டு நான் வஞ்சகம் செய்தேன் வரவுக்கு மீறிய வீண் செலவு செய்தேன் (2) வாழத் துடித்த என் கருவையும் கொன்றேன் மன்னிப்பாயா.. மன்னிப்பாயா.. 3. ஞாயிறு திருப்பலி சென்றிட மறந்தேன் ஞாயிறு மறைக்கல்வி கற்பதை வெறுத்தேன் என் தீய பழக்கத்தால் படிப்பையும் தொலைத்தேன் (2) என் தாய் தந்தையை மதித்து இடம் மறந்தேன் மன்னிப்பாயா.. மன்னிப்பாயா.. 4. வாஸ்து ஜோதிடம் நான் குறி பார்த்தேன் வார்த்தை மாறாத தெய்வத்தை மறந்தேன் நீரே என் கடவுள் நீரே என் ஆண்டவர் (2) என்னை முழுவதும் நான் உமக்கே அர்ப்பணித்தேன் மன்னிப்பாயா.. மன்னிப்பாயா.. |