Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரப்பாடல்கள் என் விடுதலையின் தெய்வமே தூய வெள்ளி
என் விடுதலையின் தெய்வமே
உமக்கா பழிச் சிலுவை
உம் காயங்களைக் கழுவவே
நான் கண்ணீரைச் சுமந்து வந்தேன்
என் கண்ணீரைப் பரிசளித்தேன்

கசையடியும் முள்முடியும் பாரச் சிலுவையும்
கல்வாரிப் பயணத்திலே ஐயோ எனக்காய் ஏற்றீரோ
இயேசு தெய்வமே என் வாழ்வின் சொந்தமே
இயேசு தெய்வமே என் வாழ்வின் சொந்தமே

கைகளையும் கால்களையும் விலாவையும் துளைத்தன
கல்வாரி மலையினிலே அப்பா எனக்காய் துடித்தீரோ
மீட்பின் தெய்வமே என் வாழ்வின் தஞ்சமே
கருணையின் தெய்வமே என் வாழ்வின் தஞ்சமே




 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?