Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரப்பாடல்கள் 1537-தியாக தீபம் யேசுவின் குருத்து ஞாயிறு

தியாக தீபம் யேசுவின் திருவுடல் இதுவே
தேடும் நெஞ்சம் தேற்றவரும் திருவுணவிதுவே
அன்பு நெஞ்சம் கொண்டவரே உண்ண வாருங்கள்
உணவை உண்டு தனையளித்து தரணி மாற்றுங்கள்

கோதுமை மணியின் பலியினிலே - இந்த
வெண்மை அப்பம் பிறக்கின்றது
என்றும் ஏங்கிடும் மாந்தர் வாழ்ந்திட
தன்னைத் தியாகமாய்த் தருகின்றது - இதை
உண்ணும் யாவரும் தன்னைப் பிறர்க்கென அளித்திடக் கேட்கிறது
அளித்திடக் கேட்கிறது
நம்மையும் உணவென நாம் கொடுப்போம் -பிறர்
நலமுடன் வாழ்ந்திட உயிர் கொடுப்போம்

விருந்தினில் கலந்திடும் பொழுதினிலே –நெஞ்சில்
பேத உணர்வுகள் மறைகின்றன
ஏழை அடிமைகள் உயர்வு தாழ்நிலை
என்ற பிரிவினை இறக்கின்றன – பிறர்
பணிகள் செய்வதே தலைவன் பணியென்ற படிப்பினைத் தருகின்றது
படிப்பினைத் தருகின்றது
விருந்தினில் கலந்திடும் பொருள் உணர்வோம் -பிறர்
பணிசெய்து வாழ்வதில் நிறைவடைவோம்



 

ஓசான்னா தாவிதின் புதல்வா
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா