Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரப்பாடல்கள் உயிர்த்த என் இறைவன் உயிர்ப்பு


உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார்
என் நம்பிக்கை பலமானதே ஒருபோதும்
இனி நான் ஜயம் கொள்ள மாட்டேன்
என் ஆண்டவரின் அடி தொட்டு நடப்பேன்
என் ஆண்டவரே என் தேவனே நீரே என் கடவுள்
ஐயா நீரே என் கடவுள்

என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன
கண்டேன் கண்டேன் என் தேவனைக் கண்டேன்
காயத் தழும்பினைத் தொட்டுப் பார்த்தேன்
விரல்களை அங்கு இட்டுப் பார்த்தேன்
நம்பினேன் நம்பினேன் என் ஆண்டவரை நம்பினேன்

உள்ளத்தில் நான் கண்ட பெருஞ்ஜோதியை
உலகெங்கும் எடுத்துரைப்பேன் ஒளி ஏற்றுவேன்
இனி மாறாது மறையாது என் நம்பிக்கை
அடி பிறழாது சிதையாது இறை மாளிகை
உலகெங்கும் நான் சொல்வேன் நற்செய்தியை
அன்பென்னும் ஆண்டவரின் திருப்பாடலை
நம்பினேன் நம்பினேன் என் ஆண்டவரை நம்பினேன்



 

ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் - ஆதிசாவினை ஜெயித்தெழுந்தார்