tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன்  
சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன்
அன்னைமரி ஈன்றெடுத்த தேவன்
விண்ணுலக மண்ணுலக வேந்தன்
என்னில் இன்று மலர்ந்த இராஜன்
பிறந்த நாள் இன்று பிறந்த நாள் பாலன் பிறந்த நாள்
ஹேப்பி கிறிஸ்மஸ் டு யூ மெர்ரி கிறிஸ்மஸ் டு யூ

தாவீதின் வம்சம் லாலா யூதாவின் சிங்கம் லாலா
பெத்லஹேம் ஊரில் பிறந்தது
ஆயர்கள் கூட்டம் லாலா விண்மீன்கள் ஆட்டம் லாலா
மீட்பரைக் கண்டு துதித்தது
நீதி நேர்மை வளர்ந்திடவே நிம்மதி வாழ்வில் மலர்ந்திடவே
வாழ்வின் பொருளைக் காட்டிடவே வளமை யாவும் கூட்டிடவே
ஆதி முதல்வன் அன்பின் கலைஞன்
அமைதியின் மன்னன் தோன்றிவிட்டார்

சங்கத்தமிழ் பாட்டில் லாலா சந்தங்களைச் சேர்த்து லாலா
செங்கமல வண்டுறங்க சிந்து பாடுவோம்
மங்களங்கள் பொங்க லாலா நெஞ்சமதில் வந்த லாலா
தங்கச்சுடர் மன்னவனைத் தாலாட்டுவோம்
தூங்கும் விழிகள் ஒளிகாணவே இங்கு கதிரவன் உருவானதே
ஏங்கும் மனங்களின் உறவாகவே தங்கி வாழ்ந்திட உயிரானதே
வங்கக்கடலே பொங்கும் அமுதே
இன்பமழையே ஆராரிரோ



 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா