tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் வானம் இருந்து வந்து  
வானகம் இருந்து.... வையகம் எழுந்த.... எங்கள் இயேசுவே...
நீர் வாரும்.... எங்கள் இதயக் கோவிலில்....
லா.. ல.. லா.. ல.. லா.....

வானம் இருந்து வந்து வையம் எழுந்து வந்த
எங்கள் இனிய தெய்வம் இயேசுவே
கண்ணில் மகிழ்ச்சி பொங்க நெஞ்சில் எழுச்சி பொங்க
உம்மை இதயம் தன்னில் ஏந்துவோம் - 2
வாரும் வாரும் எங்கள் இயேசுவே எங்கள்
இதயம் என்னும் கோவிலில் - 3
லா.. ல.. லா.. ல.. லா...

வாழ்வு தரும் வார்த்தை எல்லாம்
ஆண்டவர் உம்மிடமே உள்ளன
வல்லவர் நீர் தரும் உணவும்
அழியா உணவாய் திகழ்கின்றது - (2)
என் மீது நீர் வரும் நேரமெல்லாம்  - அது
தேனினும் இனிதாய் இனிக்கின்றது
எம்மோடு நீர் இல்லா நேரமெல்லாம்
அது நிலவில்லா வானமாய் விடிகின்றது
உண்மை ஒளியே உயிரே உணவே எழுந்திடுவாய்
அன்பே அருளே எம்மில் நீயும் கலந்திடுவாய்
ஆ.... ஆ... ஆ.....

அப்பம் அதை கரம் எடுத்து
இது என் திரு உடல் என மொழிந்தேன்
திராட்சை ரசம் கரம் ஏந்தி
இது என் திரு இரத்தம் என மொழிந்தேன் - (2)
உம்முடல் உண்ணும் நாங்களெல்லாம் - தினம்
எம்முடல் பிறர்க்காய் இழக்க வேண்டும்
உம் இரத்தம் பருகும் நாங்களெல்லாம்
தினம் எம் இரத்தம் பிறர்க்காய் சிந்த வேண்டும் (உண்மை ஒளியே)










 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா