கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | உன்னத கீதம் பாட |
உன்னத கீதம் பாட ஆலய மணிகள் முழங்க தேவபாலன் இயேசு மண்ணில் நமக்காய் பிறந்தார் மகிழ்வோம் புகழ்வோம் இணைந்து கூடி நடனமாடி ஆர்ப்பரிப்போமே Happy Happy Christmas Marry Marry Christmas Happy Happy Happy Christmas விண்ணில் வெள்ளி தோன்றவே விமலனாய் உதித்தாரே மண்ணில் அமைதி ஓங்கவே மரியிடம் பிறந்தாரே மன்னர் மூவர் காண மந்தை ஆயர் கூட கந்தைக் கோலமாக கடவுள் வந்தார் மகிழ்வோம் புகழ்வோம் இணைந்து கூடி நடனமாடி ஆர்ப்பரிப்போமே வாடிடும் மனித உள்ளங்கள் மகிழ்ந்திட வந்தாரே இதயத்தின் இன்னல்கள் தீரவே இறைமையாய் வந்தாரே அன்பின் வேந்தனாயத் தேவ தூதனாய் ஏழை வடிவமாய் நமக்காய் பிறந்தார் மகிழ்வோம் புகழ்வோம் இணைந்து கூடி நடனமாடி ஆர்ப்பரிப்போமே |