| கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1429-கன்னி ஈன்ற செல்வமே |
|
ஆ……ஆரோ ஆ.ரி.ரோ….ஆ.ரா.ரோ ஆ….ஆரோ….ஆரிரோ…..ஆராரோ கன்னி ஈன்ற செல்வமே - இம் மண்ணில் வந்த தெய்வமே கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே எண்ணமேவும் வண்ணமே என்னைத்தேடி வந்ததேன் ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ - (2) எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய் ஞாலம் காக்கும் நாதன் நீ சீலக்கரத்தில் அடங்கினாய் தாயுன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தையேன் ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ - (2) வல்லதேவன் வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய் (2 ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ அன்னை துணையை நாடினாய் இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன் ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ - (2) கன்னி ஈன்ற செல்வமே - இம் மண்ணில் வந்த தெய்வமே ஆ……….ரா…ரா.ரோ ஆரிரோ…… ஆராரோ ஆரிரோ……..ஆராரோ ஆரிரோ……..ஆராரோ ஆரிரோ……..ஆராரோ |