Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1414-என்னைப்போல பிறந்தாயே  
என்னைப்போல பிறந்தாயே - சின்னஞ் சிறு பாலகா
மண்ணில் புனிதம் தந்தாயே - தெய்வத் திருபாலகா
அளவில்லாத ஆனந்தம் - என் நெஞ்சில் இனி ஆரம்பம் - 2
நன்றி நன்றி சொல்வேன் நானும் உன்னைப்போல் வாழ்வேன் - 2

லால லால லா – லலல லா ல லா – 2
லலலலா லலலலா லலலலா லலலலா

இறைச் சித்தம் நிறைவேற நீ குழந்தையாகப் பிறந்தாயே
ஏழை வாழ்வு மீட்படைய எளிய குடிலில் நிறைந்தாயே
ஒருபோதும் கைவிடாத துணையென மலந்தாயே – என்
கரம்பிடித்து வழி நடந்த என்னில் வந்த நண்பனே

நன்றி நன்றி சொல்வேன் நானும் உன்னைப்போல் வாழ்வேன் - 2

வேண்டும் வரம் தந்திடவே தேடி வந்த நல் உறவே
ஆண்டு பல காத்திருந்த மனிதர் ஏக்கம் தீர்ந்தாயே
எனைநாளும் பிரியாத உறவென உதித்தாயே – 2 நான்
எங்கு செல்ல என்ன செய்ய சொல்ல வந்த நண்பனே
நன்றி நன்றி சொல்வேன் நானும் உன்னைப்போல் வாழ்வேன் - 2

என்னைப்போல பிறந்தாயே - சின்னஞ் சிறு பாலகா
மண்ணில் புனிதம் தந்தாயே - தெய்வத் திருபாலகா
அளவில்லாத ஆனந்தம் - என் நெஞ்சில் இனி ஆரம்பம் - 2
நன்றி நன்றி சொல்வேன் நானும் உன்னைப்போல் வாழ்வேன் - 2

Happy Happy Christmas  - ஆஹா
Marry Marry Christmas

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா