Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் குணமளிப்பரே குணமளிப்பவரே  

குணமளிப்பரே குணமளிப்பவரே என்னை குணப்படுத்தும்
எந்தன் இயேசுவே இயேசுவே என்னை குணப்படுத்தும்
சுகமளிப்பவரே சுகமளிப்பவரே என்னை சுகப்படுத்தும்
எந்தன் இயேசுவே இயேசுவே என்னை சுகப்படுத்தும்

1. என் உடல் வேதனைகள் - உன்
முன்னால் வைத்தேன் அய்யா
எந்தன் கண்ணீரினால் - உந்தன்
பாதம் நனைத்தேன் அய்யா
தாவீதின் மைந்தனே மனமிரங்கும் அய்யா
உயிருள்ள தேவனே உயிர் தாரும் அய்யா
இயேசுவே இயேசுவே எந்தன் இயேசுவே

2. உன் திரு இரத்தத்தினால்
என்னைக் கழுவும் அய்யா
என் நாடி நரம்புகளை
வலுப்பெறச் செய்யும் அய்யா
தாவீதின் மைந்தனே மனமிரங்கும் அய்யா
உயிருள்ள தேவனே உயிர் தாரும் அய்யா
இயேசுவே இயேசுவே எந்தன் இயேசுவே



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!