Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் தொடும் என் கண்களையே  

தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே

1. தொடும் என் காதினையே
உம் குரல் கேட்க வேண்டுமே
இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே

2. தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே
இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே

3. தொடும் என் கைகளையே
உம் பணி செய்ய வேண்டுமே 
இயேசுவே உம் பணி செய்ய வேண்டுமே 

4. தொடும் என் மனதினையே
மனப்புண்கள் ஆற வேண்டுமே 
இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே

5. தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே
இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே

6. தொடும் என் ஆன்மாவையே
என் பாவம் போக வேண்டுமே
 இயேசுவே என் பாவம் போக வேண்டுமே

7. தொடும் என் இருதயத்தையே
உம் அன்பு பெருக வேண்டுமே
 இயேசுவே உம் அன்பு ஊறவேண்டுமே





 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!