இயேசுவே நீர் தொட்டால் போதும் |
இயேசுவே நீர் தொட்டால் போதும் - என் உடலெல்லாம் அற்புதம் காணும் இயேசுவே நீர் சொன்னால் போதும் - என் மனமெல்லாம் சுகமாய் மாறும் - 2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே நீர் தொட்டால் போதும் - என் உடலெல்லாம் அற்புதம் காணும் இயேசுவே நீர் சொன்னால் போதும் - என் மனமெல்லாம் சுகமாய் மாறும் 1. நாவசைத்து பேசாத என் வாயும் கூட வகைவகையாய் கீதங்கள் பாட செய்வீரே - 2 2. எவ்வொலியும் கேட்காத என் காதும் கூட அயராது உன் வார்த்தை கேட்க செய்வீரே - 2 3. எழிலேதும் காணாத என் கண்ணும் கூட வரமான உம் வதனம் காண செய்வீரே - 2 4. செயலேதும் அறியாத என் கைகள் கூட விலகாத உன் கரங்கள் பற்ற செய்வீரே - 2 5. உணர்வேதும் இல்லாத என் வாழ்வும் கூட உறவாக என்னோடு உடன் வாழ்வீரே - 2 |