நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | கரம் குவித்து பாடுகிறேன் |
கரம் குவித்து பாடுகிறேன் என் இயேசுவே ஆராதனை என் இதயத்தின் ஆழத்திலிருந்து என்இயேசுவே ஆராதனை இயேசுவே உமக்கு ஆராதனை (4) உந்தன் ஞானத்திற்காய் நான் ஏக்கம் கொண்டேன் உம் சித்தம் செய்திட தாகம் கொண்டேன் தூய நற்கருணையாய் என்னில் நீர் வரும் போதிலே எந்தன் நெஞ்சில் ஆனந்தமே இயேசுவே உமக்கு ஆராதனை (4) உம்மோடு ஒன்றாகி வாழ்வதில் ஆர்வம் கொண்டேன் உம்மை அறிவதில் ஆற்றல் கண்டேன் அருளடையாளமாய் என்னில் நீர் வரும் நேரம் எந்தன் நெஞ்சில் ஆனந்தமே இயேசுவே உமக்கு ஆராதனை (4) |