Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் அற்புதர், அற்புதர்,  
அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்

இயேசு அற்புதர்
எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்

என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்
தீர்த்த இயேசு அற்புதர்
எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்
காத்த இயேசு அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும் – எங்கள்
இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே – எல்லோரும்

அலைகடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே – எல்லோரும்

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!