நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | அகிலம் படைத்த தெய்வமே |
அகிலம் படைத்த தெய்வமே அன்பாய் என்னில் வாருமே ஆற்றல் அருளும் இறைவனே அமைதி என்னில் தாருமே என்னுள் எழுகின்ற கார்மேகங்கள் கண்ணீர் மழையாகும் நேரங்களில் தேற்றிடும் தெய்வமே என் இறைவா இப்போதும் எப்போதும் காத்திடுமே கண்ணில் தோன்றிடும் கானல் நீராய் எல்லோரும் மறைகின்ற நேரங்களில் மாறாத தெய்வமே என் இறைவா இப்போதும் எப்போதும் காத்திடுமே |