| தூய குழந்தை தெரேசாள் | சிறு வழி தந்த சிறுமலரே | 
|  
			 
			சிறு வழி தந்த சிறுமலரே சிலுவையின் வழியினில் நடந்தவளே மானிட அன்பே அணைத்திழுக்க மாபெரும் ........... குழந்தை இயேசுவின் தெரேசாளே குவலயம் போற்றிடும் குழந்தையே வாழ்த்துவோம் உமை வணங்குவோம் உம் வழியினில் நடந்திடுவோம் போற்றுவோம் உனைப் புகழுவோம் உன் துணையினில் மகிந்திடுவோம் மரகத மணியே மாட்சிமைப் புயலே மௌனப் புன்னகையாலே துறுதுறு வயதில் துறவறம் இணைந்தாய் தூய முகத்தைக் கொண்டவளே உடல் வளம் இழந்தும் உயிரோடு மறைந்தாய் உயர்ந்த கருத்தை நீ பகிந்தாய் இறந்திட இருந்தும் திருவடி தொழுதாய் சிறந்த மனங்களில் நீ வதிந்தாய் தடைகளைக் கடந்தாய் தாழ்மையில் நிறைந்தாய் அன்பே உன் மொழிதானே கலைகளில் பிறந்தாய் கவிதைகள் புனைந்தாய் ஆன்ம விளக்கை கொண்டவளே மனதினில் துணிந்தாய் மகிமையில் நிறைந்தாய் மகேன்ம இறைவனை நீ தொடர்ந்தாய் பிணிகளில் இருந்தோம் பணிகளில் சிறந்தாய் பணிந்து இறைவனை நீ தொழுதாய்  |