tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய மிக்கேல் அதிதூதர் 1185-பார் போற்றும் தூதரே  
பார் போற்றும் தூதரே பாடிநின்றோம் உம்மையே
தூய மிக்கேல் அதிதூதரே
இறைத் துணைவேண்டி உமை வேண்டினோம் -2 (2)

ஆண்டவரின் அருகினில் அணிஅணியாய் பணிந்திடும்
ஆனந்த தூதர் தலைவரே
ஆறுதல் தேடிடும் அடியவர் எமக்கென
ஆதரவாய் வேண்டும் துணைவரே (2)
எம் அரணாகி அனைத்தும் நடத்துமே
உம் அடைக்கலத்தில் இறையைக் காண்போமே (2)

கடவுளின் நிகரெனில் கடவுள் தாம் எனும் பெயரில்
கடமையோடு காக்கும் வல்லவரே
கடனும் நோயும் கண்ணீரும் அலைபோலே எழுந்திடினும்
கலங்கரையாய் விளங்கும் வல்லவரே (2)
எம் கவலை யாவும் துரத்த வாருமே
தினம் கலங்காது வாழச் செய்யுமே (2)

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!