tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தவக்காலப்பாடல்கள் 1505-கல்வாரிக்குப் போகலாம் வாரீர்  
கல்வாரிக்குப் போகலாம் வாரீர் - 2 எம்
காருண்ய யேசுவின் காட்சியைப் பார்த்திட

பொல்லாப் பகைவர் கூட்டம்
எல்லாம் திரண்டு அங்கு
நல்லாயர் மீட்பர் தன்னை
சொல்லும் அவஸ்தை காண

சிவப்பங்கி தரித்தோராய்
சிரசில் முள்முடி பூண்டு
தவத்தில் உயர்ந்த நாதன்
தவிக்கும் முகத்தைப் பார்க்க

பாவச்சுமை போக்கவே
செந்நீர் சொரிந்தவராய்
பாரச் சிலுவை தோளில்
சுமக்கும் பரனைப் பார்க்க

நாவும் வரண்டதினால்
தாகம் கொண்டேன் என்றாராம்
பாவிகள் காடிதன்னை
பருகக் கொடுத்தனராம்

ஐயோ பிதாவே என்னை
ஏன் கைவிட்டீர் என்றழும்
துய்யன் துயரசப்தம்
தொனிக்கிறதங்கே இன்னும்







 

சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய குருதியினாலே விடுதலை அடைந்தேனே