tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      
Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் நம்பிக்கை நட்சத்திரம் இயேச  
நம்பிக்கை நட்சத்திரம் இயேசு - நம்
இதய வானில் உதித்து விட்டார் இயேசு

யுகங்கள் எல்லாம் ஒலிக்கும் அவர் பேச்சு
அவர் தானே நம் வாழ்வின் மூச்சு
புகழுமே புகழுமே தலைமுறைகள் யாவும் அவரைப் புகழுமே
வணங்குமே வணங்குமே மூவுலகம் அவரை என்றும் வணங்குமே

தாழ்நிலையில் இருந்தோர்க்கு மீட்பு வந்தது
பசி தாகத்தோடு அலைந்தோர்க்கு மீட்பு பிறந்தது
செருக்குமிகு எண்ணங்களை சிதறடிப்பார்
சேனைகளின் ஆண்டவரைத் தேர்ந்துவிட்டார்
புகழுமே புகழுமே தலைமுறைகள் யாவும் அவரைப் புகழுமே
வணங்குமே வணங்குமே மூவுலகம் அவரை என்றும் வணங்குமே

ஏழைகளின் தோள்களுக்கு வீரம் வந்தது
ஏற்றத் தாழ்வு மண்ணிலிருந்து மறைந்து போனது
ஆணவத்தின் ஆட்சி என்றும் மறைந்திடுமே
ஆற்றல் மிகு ஆண்டவரும் பிறந்துவிட்டார்
புகழுமே புகழுமே தலைமுறைகள் யாவும் அவரைப் புகழுமே
வணங்குமே வணங்குமே மூவுலகம் அவரை என்றும் வணங்குமே

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா